அனிதாவிற்கு ஆதரவாக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்கின்றது

அனிதாவிற்கு ஆதரவாக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்கின்றது

நீட் தேர்வினால் அரியலூரை சேர்ந்த அனிதா தற்கொலை செய்துகொண்ட காரணத்தினால் தமிழ் நாட்டிலும் புதுவையிலும் பல இடங்களில் மாணவர்கள் போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்றன.

போராட்டத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற இடங்களில்  ரயில் மற்றும்  பேருந்து நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன. சற்றுமுன் நெல்லை மாவட்டத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நெல்லையிலும், சென்னையில் உள்ள லயோலா பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, கும்பகோணம், அரியலூர்,சங்கரன் கோவில், விருத்தாச்சலம் போன்ற இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அனிதா அவர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை இப்போராட்டம் நடைபெறும் என்பதையும், நீதி கிடைக்கவில்லை என்றால் இன்னும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்பதையும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திடமிருந்து இன்னும் எவ்வித தகவலும் வரவில்லை என்று மாணவர்கள் போராட்டத்தில் இன்னும் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதன் காரணத்தினால் நீட் தேர்வை தமிழ் நாட்டில் ரத்து செய்வது அனைவருக்கும் நல்லது.

அனிதா அவர்களின் இறுதி சடங்குகள் போன்ற எவ்வித நிகழ்வுகளிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை என்றும் சர்சைகள் எழுந்துள்ளது. மேலும் அனிதா அவர்களின் வீட்டிற்கு 7 லட்சம் நிதி உதவி மாநில அரசாங்கம் கொடுத்துள்ளது, அதை வாங்க மறுத்துவிட்டனர்.

அனிதா வீட்டினர் நீட் தேர்வை ரத்துசெய்யும்மாறு கேட்டுக்கொண்டனர் . இதன் காரணத்தினால் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் மேலும் தீவிரப்பத்தியுள்ளனர். பொறுமையாக விளக்கு போன்று எறிந்திருக்கும் போதே தீர்ப்பை வழங்குவது நல்லது, இவை நீடித்தால் காட்டுத்தீயை போன்று எறிவதற்கு மாணவர்கள் தயாராகவுள்ளனர். இதன் விளைவால் சிரமத்திற்கு உள்ளாவது தப்புச்செய்த அரசாங்கம் மட்டுமே.

Blue Whale Challenge Hits Tamil Nadu

Martyred Abdul Rashid’s Daughter Cry Hurts Nation

அனிதாவிற்கு ஆதரவாக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்கின்றது