சாம்சங் நோட் 8 இந்தியா

சாம்சங் நோட் 8 இந்தியா

சாம்சங் நோட் 8 என்ற புத்தம்புதிய கைபேசி இந்தியாவில் வெளிவர உள்ளது. இதை வாங்குவதற்கு ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்புடன் இருக்கிறார்கள். இந்த மிடுக்கு அலைபேசியை வெளிநாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, தெற்கு கொரியா போன்ற நாடுகளில் இன்னும் பத்து நாட்களில் விற்பனையாகவுள்ளது.

சாம்சங் நோட் 8ஐ வாங்க விருப்பமுள்ளவர்கள் சாம்சங்கின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் முன் பதிவு செய்துக்கொள்ளலாம். இவற்றின் மூலம் முன்பதிவு செய்வதற்கான அம்சங்கள் மட்டுமே உள்ளன. முன்பதிவு செய்வதின் மூலம் போனை பெறுவதற்கு இயலாது. ஆனால் பதிவு செய்வதின் மூலம் நமக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுவிடும். பதிவில் நமது பெயர், இ மெய்ல் ஐடி, வீட்டின் முகவரி போன்றவை பதிவுசெய்திருக்க வேண்டும்.

இந்தியாவில் இப்போனை இம்மாதத்தின் முடிவில் வெளிக்கொண்டு வருவதாக குறிப்பிடுகின்றன. இந்த போனின் விலை ரூபாய் 62,000 முதல் 74,900 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. விலை நிர்ணயம் சேமிப்பு அளவை (Storage GB) சார்ந்தே இருக்கும். 64 GBயின் விலை 62,000 முதல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நவீன கைபேசியின் சிறப்பு அம்சங்கள்  ( இந்தியா )

 • திரை அளவு 6.3 இன்ச் QHD+ screen,
 • Exynos 8895
 • Android 7.1.1 (Nougat)
 • 6 GB RAM, 64 GB சேமிப்பு (Storage),
 • 3,300 mAh பேட்டரி
 • டூயல் கேமரா ( 12 MP f.17 Primary / 8MP f1.7)
 • மேம்படுத்தப்பட்ட S Pen
 • இரண்டு சிம் வசதி அல்லது ஒரு சிம் மற்றும் ஒரு மெமரி கார்டு (upto 256GB)
 • சாம்சங் Dex
 • ப்ளூடூத் 5.0
 • Type-C 1.0 reversible connector
 • கைரேகை லாக், கருவிழி (IRIS) ஸ்கேனர்
 • IP68 அங்கீகாரம் பெற்ற தண்ணீர் உட்புகாத கருவி (Water Proof 30 minutes)
சாம்சங் நோட் 8 இந்தியா சாம்சங் நோட் 8 இந்தியா சாம்சங் நோட் 8 இந்தியா

சாம்சங் நோட் 8 இந்தியா

Varu

She is a student who love interacting with people and learning new languages. Also interested in Psychology, reading books and playing badminton.